டெல்லி கலால் கொள்கை விவகாரத்தில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கலால் கொள்கை விவகாரம் குறித்து சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த நிலையில், அமலாக்கத் துறை தொடர்புடைய வழக்கில் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் அளித்த போதிலும், சிபிஐ வழக்கில் அவர் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.