பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தாம் வெண்கலம் வென்றதற்கு பகவத் கீதைதான் காரணம் என மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தப் பிரிவில், இந்தியா சார்பில் வெண்கலம் வெல்லும் முதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் தட்டிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது வெற்றிக்கு பகவத் கீதைதான் காரணம் என்றும், கீதாசாரத்தின்படி நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இறுதி போட்டியில் கீதையின் உபதேசம் தனது மனதில் ஓடியதாக கூறிய மனு பாக்கர், கர்மாவில் கவனம் செலுத்தும்போது அதன் பலனை யோசிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.