புலிகள் பராமரிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், உலகளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் காணப்படுவதாக கூறியுள்ளார்.
அதற்கான புள்ளிவிவரத்தையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அந்த வகையில், இந்தியாவில் கடந்த 2006-இல் 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஏறத்தாழ இரண்டரை மடங்கு அதிகரித்து 3,682 ஆக உயர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், கம்பீரமான உயிரினங்களைக் காக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டங்கள் பெருமையளிப்பதாக அந்த பதிவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.