விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பாலிவுட் நடிகர் அமீர்கான் வாங்கியுள்ளதாகவும், அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.