பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராஜா சாப் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார்.
இதையடுத்து அவர் நடிப்பில் உருவான சலார், கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், கதை ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில், தமன் இசையில் உருவாகியுள்ள ராஜா சாப் திரைபடத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.