கேரள மாநிலம், பாலக்காட்டில் இடைவிடாது பெய்த மழையால், பாரதப்புழா ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தீவை போல காட்சியளிக்கிறது.
இதேபோல கோழிக்கோட்டில் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.