குஜராத்தில் சந்திபுரா தொற்றுப் பரவல் காரணமாக 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் ஜூன் 2024 தொடக்கத்தில் இருந்து, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான மூளை அழற்சி நோய்க்குறி தொற்றுப் பரவல் பதிவாகியுள்ளன.
31 ஜூலை 2024 நிலவரப்படி, 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தின் 24 மாவட்டங்களில் இருந்து 140, மத்தியப் பிரதேசத்திலிருந்து 4, ராஜஸ்தானிலிருந்து 3 & மகாராஷ்டிராவிலிருந்து 1 பதிவாகியுள்ளது. அதில் 59 பேர் உயிரிழந்தனர். சந்திபுரா தொற்று 51 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் (டி.ஜி.எச்.எஸ்) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்.சி.டி.சி) இயக்குநர் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தலைமை இயக்குநர் ஆகியோர் இன்று இது குறித்து ஆய்வு செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநர், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டப் பிரிவுகள் மற்றும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
19 ஜூலை 2024 முதல் புதிய தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது. கொசுக்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், மருத்துவ பணியாளர்களுக்கு உணர்திறன், குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை சரியான நேரத்தில் பரிந்துரைத்தல் போன்ற பல்வேறு பொது சுகாதார நடவடிக்கைகளை குஜராத் அரசு மேற்கொண்டுள்ளது.
பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், நோய்ப்பரவல் குறித்த விரிவான தொற்று நோயியல் விசாரணையை நடத்துவதிலும் குஜராத் மாநில அரசுக்கு உதவ தேசிய கூட்டு நோய்ப்பரவல் தடுப்புக் குழு நிறுத்தப்பட்டுள்ளது.
மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு பதிவாகும் மாநிலங்களுக்கு வழிகாட்ட தேசிய நோய் கட்டுப்பாடு மையம் மற்றும் தேசிய குற்றவியல் நடைமுறை மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.