புதுச்சேரியில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஸ்விகி ஊழியர் மீது ஆட்டோ மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாரம் கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார், ஸ்விகி ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த விஜயகுமார் மீது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.