இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஷிம்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாறைகள் அடித்து செல்லப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஜேசிபி கொண்டு பாறைகளை அகற்றும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.