ஸ்விக்கியில் அதிக அளவில் சைவ உணவுகளை ஆர்டர் செய்யும் நகரமாக பெங்களூரு உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் சைவ உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களில் 3-ல் ஒருவர் பெங்களூரில் உள்ளதாக தெரிவித்துள்ளது. மசாலா தோசை, பன்னீர் பிரியாணி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆகிய உணவுகளே அதிக அளவில் ஆர்டர் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.