வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்காக தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 310-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்தோருக்காக நாஞ்சிக்கோட்டை பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் காயமடைந்து சிகிச்சைபெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.