ஆதிக்கச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்ததை, அன்றைய காலகட்டத்தில் துணிச்சலுடன் எதிர்கொண்ட, சுதந்திர போராட்ட வீரர் ‘ மாவீரன் தீரன் சின்னமலை’ அவர்களின் 219-வது நினைவு தினம் இன்று.
நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தீவிரமடையும் காலத்திற்கு முன்பே, தனது பாணியிலான செயல்பாடுகள் மூலம், ஆதிக்கச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார்.
1800-ஆம் ஆண்டுகளில், ஈரோடு மற்றும் அறச்சலூர் பகுதிகளில் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக போர் புரிந்து, பெரும் வெற்றி கண்டார். சுதந்திரத் தாகத்துடன், தங்களது இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கு முன்னோடியாய் வாழ்ந்து மறைந்த, ‘மாவீரன் தீரன் சின்னமலை’ அவர்களது வீர வரலாற்றைப் போற்றி வணங்கிடுவோம்.