சென்னை கடற்கரை – காட்பாடி இடையே வந்தே பாரத் மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை கடற்கரை – காட்பாடி மற்றும் சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வந்தே மெட்ரோ ரயிலின் பெட்டிகள், புறநகர் ரயில் மற்றும் வந்தே பாரத் ரயிலை ஒருங்கிணைத்தது போல் தயாரிக்கப்பட்டுள்ளன.
தானியங்கி கதவுகள், செல்போன் சார்ஜிங், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. சென்னை கடற்கரை – காட்பாடி, சென்னை-திருப்பதியை தொடர்ந்து, 180 நகரங்களை இணைக்கும் வகையிலான வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.