‘இல்லம் தோறும் தேசியக் கொடி’ இயக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை, அமைச்சர் அமித் ஷா, 2024 ஆகஸ்ட் 9 முதல் 15-ம் தேதி வரை ‘ஹர் கர் திரங்கா எனப்படும் இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் கீழ் மூவர்ணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி, https://harghartiranga.com இணையதளத்தில் தங்கள் சுய புகைப்படங்களைப் (செல்ஃபி) பதிவேற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (03-08-2024) சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியின் இல்லம் தோறும் தேசியக் கொடி (#HarGharTiranga) இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் ஒவ்வொரு இந்தியரிடமும் அடிப்படை ஒற்றுமையை உருவாக்கியுள்ளது.
இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, மீண்டும் அதே உற்சாகத்துடன் இதில் பங்கேற்குமாறு அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நமது பெருமையை, நமது தேசியக் கொடியை உங்கள் வீடுகளில் ஏற்றி, தேசியக் கொடியுடன் ஒரு செல்ஃபி எடுத்து, அதை ஹர் கர் திரங்கா இணையதளத்தில் பதிவேற்றுங்கள் என அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.