விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி வீதியுலா நடைபெற்றது.
முன்னதாக ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்க மன்னார் கோவர்த்தனகிரி அலங்காரத்திலும் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் வீதியுலா சென்றனர்.
இதனையடுத்து ஆண்டார், ரங்க மன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்