வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 365 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 148 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மேலும் 34 பெண்கள், 36 ஆண்கள், 11 குழந்தைகள் என 81 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற 200க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். அனைத்து இடங்களும் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுவதால் மீட்புப் பணி பெரும் சவாலாக உள்ளது.