ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நெல்லை கைலாசபுரம் தைப்பூச படித்துறையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி நதியில் 108 வகையான சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழ வகைகள், காய்கறிகள், பூ உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு 108 தாம்பூலங்களுடன் நெல்லை மீனாட்சிபுரத்தில் இருந்து பெண்கள் ஊர்வலமாக எடுத்துகொண்டு கைலாசபுரம் தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தடைந்தனர்.
தொடர்ந்து பெண்கள் அமர்ந்து வழிபாடு நடத்தினர். மகா தீபாராதனைக்கு பின்னர் பூக்கள், காய்கறிகள், பழ வகைகள், இனிப்பு வகைகள் அடங்கிய 108 தாம்பூலங்களில் வைக்கப்பட்ட பொருட்கள் தாமிரபரணி நதியில் விடப்பட்டன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.