“மேட்டூர் அணையில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் 1 புள்ளி 5 லட்சம் கனஅடி நீரை பயன்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்” என மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்திலிருந்து நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது” எனவும், “அதேநேரத்தில் தமிழக மக்கள் நலனை பிற மாநிலங்கள் கண்டுகொள்வதில்லை” என்றும் குற்றம் சாட்டினார்.