தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், புகையிலை கடத்திய வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 300 கிலோ புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.