திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
பாஸ்போர்ட் இன்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல வழக்கில் கைதான குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அப்துல் ரியாஸ் கான் என்ற நபர் சிறையில் இருந்து தப்பியோடினார். இதனையடுத்து ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.