“பாலஸ்தீன போர் கடந்த 11 மாதங்களைக் கடந்து நீடித்துக் கொண்டு வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் போரை உடனடியாக நிறுத்த வேண்டி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், சென்னை சைதாப்பேட்டையில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.
பின்னர் பேசிய சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார், “போரை நிறுத்தி உடனடியாக பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம்” என்றார்.