நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் சேவா பாரதி அமைப்பினர் முனைப்போடு மீட்பு பணியில் ஈடுபட்டதை வயநாடு ஆல் இமானுவேல் சிஎஸ்ஐ தேவாலய பாதிரியார் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், சேவாபாரதி அமைப்பைப் பற்றி முன்பு தனது பார்வை வேறு மாதிரி இருந்ததாகவும், மீட்புப்பணியில் அவர்களது அர்ப்பணிப்பு, ஈடுபாட்டை பார்த்ததும் தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தங்களது தேவாலயத்தில் சேவா பாரதி அமைப்பினர் நிவாரணப் பொருட்களை வைப்பதற்கு உதவியதாகவும் அவர் கூறினார்.