வயநாடு நிலச்சரிவில் நண்பர்களை இழந்த மாணவருக்கு தன்னார்வ சிறுவன் நண்பரான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மாவட்டம் சூரல்மலையை சேர்ந்த அபிஜித், நிலச்சரிவில் தனது பள்ளி நண்பர்களை பறிகொடுத்தார். இதையடுத்து மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட அபிஜித் மற்றும் அவரது குடும்பத்தினர், மேம்பாடி முகாமில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, முகாமிற்கு சென்ற தன்னார்வலரான சிறுவனான அஜ்மல், அபிஜித்துக்கு நண்பரானார். இதனைத்தொடர்ந்து நட்பின் வெளிப்பாடாக அபிஜித்துக்கு, அஜ்மல் கேரம் போர்டு வாங்கிக் கொடுத்தார். மேலும் அபிஜித்தின் படிப்புக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.