புதுச்சேரியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷிடம், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை 4 பேர் பெற்றுள்ளனர். ஆனால், சொன்னபடி வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் ஷர்மா, தீபக் குமார், ராஜ் கவுண்ட், மற்றும் நீரஜ் குர்ஜார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.