வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டு நிலச்சரிவு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஏராளமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சூரல்மலையை சேர்ந்த பிரஜீஷ் என்பவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தனது காரை எடுத்து சென்றார்.
அப்போது வெள்ளம் அதிகரித்ததால் பிரஜீஷ் காரோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.