சென்னை கோயம்பேடு சந்தையில் அதிக வரத்து காரணமாக பூக்களின் விலை குறைந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால் கடந்த 2 வாரங்களாக பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வழக்கமாக வரும் பூக்களை விட 2 டன் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஆயிரத்து 500-க்கு விற்கப்பட்ட பூக்களின் விலை தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.