ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹரியானைவைச் சேர்ந்த மனு பாக்கர் முதல் வெண்கலம் பதக்கம் வென்றார். தொடர்ந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டர் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாக்கர் இணை வெண்கலம் பதக்கம் வென்றது, 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிசுற்று போட்டியின் சூட்-ஆப் சுற்றில் மனு பாக்கர் 3 புள்ளிகள் பெற்று 4ஆம் இடத்தை பெற்று ஹாட்ரிக் சாதனை வாய்ப்பை இழந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கத்தை உச்சி முகர்ந்த மனு பாக்கர் நிறைவு விழாவில், இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்வார் என ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.