8-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற நிலையில் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு 50 லட்ச ரூபாய் முதல் பரிசாகவும், 2-ம் பரிசாக 30 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.