உத்தரப்பிரதேச மாநிலம், ஈடாவா பகுதியில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி பகுதியில் இருந்து 60 பயணிகளுடன் இரட்டை அடுக்கு பேருந்து டெல்லிக்கு புறப்பட்டது. ஈடாவா அருகே ஆக்ரா – லக்னோ விரைவு சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.