திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சத்ரு சம்ஹார பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
ஆடி அமாவாசையையொட்டி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புனித நீராடினார்.
பின்னர், எதிரிகளை வீழ்த்த கூடிய சத்ரு சம்ஹார என்னும் சிறப்பு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். இதில் அன்புமணி ராமதாசின் மனைவி சௌமியா கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, எடைக்கு எடை துலாபாரமாக கோயிலுக்கு அரிசியை தானமாக அவர் வழங்கினர்.