விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 2025-ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
சிவகாசியில் 50க்கும் மேற்பட்ட அச்சகங்கள், காலண்டர் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு வழக்கமாக தினசரி காலண்டர்கள் பல வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று காலண்டர்களின் ஆல்பங்கள் வெளியிடுவது வழக்கம், அந்த வகையில் 2025ம் ஆண்டிற்கான காலண்டர்களின் ஆல்பங்கள் வெளியிடப்பட்டது.
இதில் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை க்யூ ஆர் கோடு மூலம் தெரிந்து கொள்ளும் வசதி இடம்பெற்றுள்ளது. . இது முகவர்கள். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.