பெரம்பலூரில் நகராட்சி ஆணையரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத 6.50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன் உள்ளிட்டோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டது.