பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீனவ பிரதிநிதிகளுடன் இன்று டெ ல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி வருகின்றன.
கடந்த வாரத்தில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி ராமேஷ்வரத்தைச் சேர்ந்த மீனவரான மலைச்சாமி உயிரிழந்ததும், ராமசந்திரன் கடலில் மூழ்கி மாயமானதும் கடும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சோக நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து மீண்டும் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, தமிழக மீனவ பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளார்.
இதற்காக இன்று அண்ணாமலையுடன் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பிரதிநிதிகளும் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.