மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டாக்கா உள்ளிட்ட நகரங்களில் அசாதாரண சூழல் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வித்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.