நெல்லை மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற்ற வீடியோ வெளியாகியுள்ளது.
நெல்லை மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், திமுக கவுன்சிலரான ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி கூட்டங்களுக்கு சைக்கிளில் வரும் ராமகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வழக்கம்போல சைக்கிளில் சென்றார். இந்நிலையில் சைக்கிளில் சென்று தனது தாயாரிடம் ராமகிருஷ்ணன் ஆசி வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.