சென்னை மணலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
மணலி விமலாபுரத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பெங்களூர் சென்றுள்ளார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 34 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக நாராயணன் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மஸ்தான் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 24 சவரனை நகைகளை பறிமுதல் செய்தனர்.