கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில், தடையை மீறி ஆயிரக்கணக்கான லாரிகள் அதிக பாரத்தோடு செல்வதால் மீண்டும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடியில் இருந்து கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் அதிக வேகத்தில் செல்வதால், வேகக்கட்டுப்பாடு மற்றும் நேரக்கட்டுபாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு சில அதிகாரிகள் உதவியோடு அதிக பாரத்தோடு கனரக வாகனங்கள் சோதனை சாவடிகளை தாண்டி செல்வது அதிகரித்துள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன்பு, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.