விவசாயிகளின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் சிவ்ராஜ்சிங் செளஹான் உறுதியளித்தார்.
விவசாயிகளின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் சிவ்ராஜ்சிங் செளஹான் உறுதியளித்தார்.
மாநிலங்களவையில் வேளாண் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த அவர், விவசாயத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
மேலும் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை நினைவுகூர்ந்த மத்திய அமைச்சர் சிவ்ராஜ்சிங் செளஹான், ஹரியானா மாநிலம் சோனிபட்டுக்கு சென்றபோது விவசாயிகளை காட்டிலும் புகைப்படக்காரர்கள்தான் அதிகளவில் நின்றதாக விமர்சித்தார்.
மேலும், கலப்பையை ராகுல் காந்தியிடம் காட்டியபோது அதுகூட தெரியாமல், அதற்கு பெயர் என்னவென அவர் கேட்டதாக சிவ்ராஜ்சிங் செளஹான் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.