அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் முனிசிபல் காலனி, ஸ்கைவே டிரேடர்ஸ் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதேப்போன்று நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடையவரின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.