வக்ஃபு வாரியங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், அதற்கான சட்டத் திருத்த மசோதாவை முதலில் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வக்ஃபு சட்டத்தில் 40 திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான மசோதா இந்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃபு வாரியத்தின் அதிகாரத்தை குறைப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.