பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ஸ்டைலாக இலக்கை சுட்டு வியப்பில் ஆழ்த்திய துருக்கி வீரர் யூசுப் டிகெக், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
எதிர்கால ரோபோக்கள் தங்கள் கைகளை பைக்குள் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா? கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரான இஸ்தான்புல்லில் இதைப் பற்றி விவாதிப்பது எப்படி?” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், ரோபோக்கள் ஒவ்வொரு முறையும் குறியின் மையத்தைத் தாக்கும் என்றும், தாம் இஸ்தான்புல்லுக்குச் செல்ல ஆவலுடன் காத்திருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.