வங்கதேசத்தில் அமையவுள்ள இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பல பொருட்களையும் திருடி சூறையாடினர். அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் வங்கதேச ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எந்த நாட்டிடமும் தனது தாய் அடைக்கலம் கேட்கவில்லை என ஷேக் ஹசீனாவின் மகன் வாசித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வங்க தேசத்தில் அமையவுள்ள இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க வேண்டும் என மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.