வங்கதேசத்தில் நிலவும் தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக அந்நாட்டுக்கான ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, கொல்கத்தா- டாக்கா விரைவு ரயில் சேவையையும், கொல்கத்தா, மைத்ரி ரயில் சேவையையும் தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.