வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்நாட்டின் தலைநகர் டாக்காவுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.