டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விளக்கினார்.
வங்க தேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்.
அவர் இந்தியாவில் அடைக்கலம் தேடி, ஹெலிகாப்டர் மூலம் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்திற்கு வந்தடைந்தார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வங்க தேச அரசியல் நிலவரம் குறித்து ஜெய்சங்கரிடம் கேட்டறிந்தார்.