வக்பு சட்டத்தில் 40 திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது, மத்திய மற்றும் மாநிலங்களுக்கான வக்பு வாரியங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான மசோதாவுக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.