சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகள் அதிகம் செலவிட வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்தார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவ கட்டமைப்புகளுக்கு 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், மாநில அரசுகள் ஆயிரத்து 806 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்ததாக ஜே.பி.நட்டா கூறினார்.