உத்தரப்பிரதே மாநிலம், வாரணாசி அருகே வீடு இடிந்து விபத்தில் சிக்கிய 9 பேர் படுகாயமங்களுடன் மீட்கப்பட்டனர்.
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள பழமையான அடுக்குமாடி வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
இது குறித்து தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்குப் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக வாரணாசி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்புப் பணியின்போது காயமடைந்த பெண் காவலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.