பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா வீரார் நீரஜ் சோப்ரா இன்று களம் காண்கிறார்.
தகுதி சுற்றில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா உள்ளிட்ட 32 பேர் களமிறங்குகின்றனர். நீரஜ் சோப்ரா பங்கேற்ற முந்தைய போட்டிகளில் 85 மீட்டருக்கும் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.
எனவே அவர் மீண்டும் தங்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.