பிஜி தீவு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிஜி தீவு, நியூஸிலாந்து, திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிஜி சென்ற திரௌபதி முர்முவை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்றார். பின்னர் அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து சுவாவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அதிபர் ரது வில்லியம் வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இந்தியாவிற்கும் பிஜிக்கும் இடையிலான வலுவான உறவு உள்ளதாக திரௌபதி முர்மு தெரிவித்தார். உலகின் தெற்கு பகுதியில் வாழும் மக்களின் நலன்களை முன்வைப்பதற்கான தளமாக பிஜி விளங்குவதாக கூறிய அவர், வெளிநாடுகளுடனான உறவை வலுப்படுத்தவே இந்தியா விரும்புகிறது என்றும் குறிப்பிட்டார்.